பிரதான செய்திகள்

பிக்குகளை அடக்கும் செயற்பாடுகளுக்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் மாநாயக்க தேரர்கள்

எதிர்காலத்தில் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இலங்கையில் தற்போது பௌத்தர்களும், பிக்குகளும் முகம் கொடுத்துவரும் அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்தும் அமைதியாக இருப்பது ஆரோக்கியமற்றது.

அது தேரர்களுக்கு உள்ள கடமையை செய்யாது விடும் விடயமாகும். இதன் காரணமாக எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.

தற்போதைய அரசியல் தலைவர்கள் பிக்குகளுக்கு உள்ள மரியாதையை சீரழிக்கும் முயற்சிகளை செய்து வருகின்றார்கள். இதனை முற்றாக நாம் எதிர்க்கின்றோம்.

பிக்குகளை அடக்கும் செயற்பாடுகளுக்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். பௌத்த சமூகத்தையும், பிக்குகளையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.

எனவே மல்வத்து பீடாதிபதிகளுடனும், பிக்குகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு கூடிய விரைவில் நாட்டின் இப்போதைய நிலை தொடர்பில் தீர்வு எடுக்க வேண்டும் எனவும் மாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையின் அரசியல் சாசனத்தில் பௌத்தம் மிக முக்கிய இடத்தினை வகித்து வருகின்றது. எனவே இவர்களுடைய இந்தக் கருத்துகள் மிக முக்கியமான விடயங்களாகும்.

இது வரையில் பௌத்த அமைப்புகள் மட்டுமே, பௌத்தம் நாட்டில் அழிக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்து வந்த நிலையில் மாநாயக்க தேரர்களும் அதனையே வலுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஞானசார தேரர் அண்மையில் பிணையில் விடுதலையாகி வந்த போது “நாம் அடையாளப்படுத்திய பிரச்சினைகளை இனி மேல் தகுந்தவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள் எனக் கூறியிருந்தார்.

மேலும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களிடம் பேச்சுவார்த்தையிலும் ஞானசார தேரர் ஈடுபட்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இந்த நிலையில் பௌத்தம் காக்கப்பட வேண்டும் என்ற வகையில் மாநாயக்க தேரர்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளமை அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இலங்கை அரசியல் பௌத்தத்தை முன்னிலைப்படுத்தியே நகர்ந்து வருகின்றது என்பதே உண்மை. இந்த நிலையில் தேரர்களின் கருத்துகள் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

மாநாயக்க தேரர்களும், மல்வத்து பீடாதிபதிகளும் இப்போது பௌத்தம் காக்கும் முக்கியஸ்தர்களாக மாறி வருகின்றனர்.

இவர்கள் அரசுக்கு எதிராக கருத்துகளை முன்வைப்பார்கள் எனின் அது தென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

@Tw

Related posts

வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!

Editor

பேஸ்புக்கில் அமெரிக்காவை விழ்த்திய இந்தியா

wpengine

விகாராதிபதி மர்ம மரம், இன்று காலை சடலம் மீட்பு

wpengine