Breaking
Sat. Nov 23rd, 2024

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

இன்று பா.உறுப்பினர் முஷர்ரப், தற்போது இலங்கை முஸ்லிம்கள் அனுபவிக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசியல், மார்க்க தலைமைகள் உட்பட அனைவரையும் ஒன்றிணையுமாறு காணொளி ஒன்றினூடாக அழைப்புவிடுத்துள்ளார். அவரின் இவ் அழைப்பானது காலத்துக்கு மிக அவசியமான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. யாரும் மறுக்கவும் முடியாது.

அவரின் காணொளியில் :

1.கார்டினலின் நேற்றைய பேச்சுக்கு ( இன்றைய பேச்சுக்கல்ல ) நன்றி தெரிவித்துள்ளார். அவரின் நேற்றைய பேச்சு நன்றி கூற கடமைப்பட்டதே!

  1. பதினொரு இஸ்லாமிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றின் அடுத்த நிலைப்பாடு பற்றி அறிவார்ந்து சிந்திக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இவ் விரு விடயங்களும் தற்போதைய ஆளும் அரசுக்கு எதிரானது. கார்டினலின் நேற்றைய பேச்சானது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தற்போதைய அரசே திட்டமிட்டு செய்திருந்தது என்ற கோணத்தில் நோக்கவல்லது. இதற்கு பா.உறுப்பினர் முஷர்ரப் நன்றி கூறியுள்ளார் என்றால், அதனை அவர் ஏற்கிறார் என்று பொருள்கொள்ள முடியும். இவர்களின் கூற்றுக்களின் அடிப்படையில் இக் கோர செயலை செய்த ( இது எனது கருத்தல்ல ) இவ்வரசை நாம் ஆதரிக்க முடியுமா? ஒருகாலமும் ஆதரிக்க முடியாது. நீங்கள் இவ் அருசையே ஆதரித்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நினைவு படுத்திகொள்ளுங்கள்.

11 இஸ்லாமிய அமைப்புக்களை தடைசெய்ததும், பொது பல சேனாவை தடைசெய்யாததும் இவ்வரசே! இவ் அரசோடு இணைந்து கொண்டு, இவ்விடயத்தில், எவ்வாறு அடுத்த கட்ட நகர்வை சிந்திக்க முடியும். இதனை பல இடங்களில் பேசியுள்ள நீங்கள், ஒரு தடவை கூட நேரடியாக அரசை தாக்கி பேச முடியாத நிர்ப்பந்தத்தில் உள்ளீர்கள். முதலில் உங்கள் நிலையை, நீங்கள் சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றால், அரசோடு இணைந்துள்ள உங்களால் எதனையும் சாதிக்க முடியாது என்பதுவே அதன் பொருள். அவ்வாறானால் நீங்கள் அரசோடு இருப்பது எதற்காக? அதற்காக அரசை தாறுமாறாக விமர்சிக்க வேண்டும் என கூறவில்லை. நடுநிலையாக இரியுங்கள்.

பா.உ முஷர்ரப் தற்போதைய அரசை எதிர்க்கவும், ஆதரிக்கவும் முடியாத நிலையில் உள்ளார். எதிர்த்தால் அரச பக்கத்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆதரித்தால் மக்கள் விமர்சனங்களை சந்திக்க வேண்டும். இவ்விரண்டையும் சமாளிக்கவே அரசையும் நோகாது, மக்களையும் சமாளிக்கும் வண்ணம் இவ்வாறான காணொளிகளை வெளியிடுகிறார். மக்களிடையே முகத்தை மறக்காமல் நினைவுபடுத்தும் நுட்பத்தை பயன்படுத்துகிறார். ஊடகவியலாளர் அல்லவா? பா.உறுப்பினர் முஷர்ரப் மக்களை ஒன்றிணைய அழைப்புவிடுப்பதற்கு முன்பு, ஒரு திடமான கொள்கை வரைந்து பயனிப்பது பொருத்தமானது.

குறிப்பு : பா.உறுப்பினர் முஷர்ரப் அரச சார்பு அணியோடு முற்றாக சங்கமித்துவிட்டார் என்ற அடிப்படையில் இக் கட்டுரை வரையப்பட்டுள்ளது. தேவையேற்படின் நிரூபிக்க தேவையான ஆதாரங்களை வெளிப்படுத்த முடியும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *