பிரதான செய்திகள்

பால்மாவின் விலை குறைவடையும் சாத்தியம்!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

இலங்கை ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலைகள் 200 ரூபாவால் குறைக்கப்பட்டது. அதேபோன்ற விலை குறைப்பு ஒன்று ஜூலை மாத ஆரம்பத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மாதாந்தம் 6 ஆயிரத்து 500 முதல் 7 ஆயிரம் மெற்றிக் டன் வரையிலான பால்மா பயன்படுத்தப்பட்டு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சட்டவிரோத வாகன இறக்குமதி : சுங்க அதிகாரி உடந்தை

wpengine

தலைமன்னார், தாராபுரம் பகுதியில் ஒருவர் பணத்துடன் கைது

wpengine

பொதுமக்களுக்கு அருகாமையில் இருப்பதைக் குறைக்கும்படி ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல்…

Maash