உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுடன் செல்பி

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுடன் செல்பி எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியதால் இந்திய ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி விலகியுள்ளார்.


பாலியன் வன்செயலால் பாதிக்கப்பட்ட ‌30 வயது பெண் ஒருவரை சந்தித்து விசாரிப்பதற்காக ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத் தலைவி சுமன் சர்மாவும், உறுப்பினர் சோம்யா குர்ஜாரும் வடக்கு ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல்நிலையத்திற்கு சென்றனர்.

அப்போது அந்தப் பெண்ணுடன் அவர்கள் இருவரும் செல்பி எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து குர்ஜார், முதலமைச்சர் வசுந்தரா ராஜேவை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்யா குர்ஜார், தனது ஆவணமாக்கிக்கொ ள்வதற்காகத் தான் அந்தப் பெண்ணைப் படம் பிடித்ததாகவும், அதனை அவரும் விரும்பியதாகவும் கூறினார்.

இந்த விவகாரத்தில் தனது கருத்தை முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டதாகவும், தனது செயல்
பலரது மனதை புண்படுத்திவிட்டதால் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகியதாகவும் சோம்யா குர்ஜார் விளக்கமளித்தார்.

Related posts

மன்னார் காற்றாலை திட்டத்தை திறந்து வைத்த மஹிந்த

wpengine

கடமை நேரத்தில் பிரதேச செயலாளருக்கு மாரடைப்பால் பின்பு உயிரிழப்பு

wpengine

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?

wpengine