பிரதான செய்திகள்

பாலியல் தொந்தரவு கொடுத்த சமுர்த்தி உத்தியோகத்தர் கைது!

ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு  காட்டி தையல் மெசின் உட்பட  சலுகைகள் பல  தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வசிக்கின்ற 2 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணிடம் பல சலுகைகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, தனது ஆணுறுப்பினை புகைப்படம் எடுத்து குடும்ப பெண்ணின் வட்அப்ஸ் செயலிக்கு தொடர்ச்சியாக அனுப்பி பாலியல் சேட்டை செய்து வந்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்பான முறைப்பாடு  ஒன்று இன்று (7)  கிடைக்கப்பெற்றிருந்தது.

இதற்கமைய சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பல்வேறு  குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.யூப் தலைமையிலான பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரான 41 வயது மதிக்கத்தக்க சாய்ந்தமருது பிரதேச செயலக சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.

மேலும் சந்தேக நபரான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பல திருமணங்களை செய்துள்ளதுடன், இவ்வாறு  பல்வேறு கணவன் அற்ற பெண்கள் மற்றும் தனிமையில் உள்ள பெண்களை நாடி தனது இச்சைக்காக  ஆசை வார்த்தைகளை  கூறி  பாலியல் இலஞ்சம் பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபரை நாளை (8) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பரீட்சைத் திணைக்களத்தில் இப்தார்! 8 முஸ்லிம் ஊழியர்கள் மட்டும் (படம்)

wpengine

உதா கம்மான (கிராம எழுச்சி) நாளை முல்லைத்தீவு கிராமம் மக்களிடம் கையளிக்கப்படும்

wpengine

வரவு,செலவு திட்டம் இலங்கையை சோமாலியாவாகவே மாற்றும் – சஜித்

wpengine