பிரதான செய்திகள்

பாலித தெவரப்பெருமவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – சட்டத்தரணிகள் சங்கம்

பாடசாலைக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதன் மூலம் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும பிழையான முன்னுதாரணம் வழங்கியிருப்பதாகவும், அதை வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.

ஜனாதிபதிக்கு அந்த சங்கம் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இச்செயற்பாடு நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தவறான முன்னுதாரணம் என்பதுடன், நல்லாட்சிக்காக வழங்கிய வாக்குறுதி மீறலுமாகும் என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்ககட்டப்பட்டுள்ளது.

அதன்படி பொறுப்புமிக்க பதவி வகிக்கும் அரசியல்வாதியாக அவரினால் மேற்கொள்ளப்பட்டிருப்பது பெறுமதியற்ற செயற்பாடு என்றும், ஆகவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதவிர, மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு அரசியல் தலையீடுகள் இன்றி தகுதியான ஒருவரை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அந்த சங்கம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related posts

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்த! கிராம சேவையாளர் பிரிவுக்கு 3 இராணுவம்

wpengine

மீண்டும் மன்னார் வைத்தியசாலை வைத்தியரின் அசமந்த போக்கு! பெண் பரிசோதகர் பலி

wpengine

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று வர்த்தமானியில்

wpengine