(Rizvi Aliyar Meerasahibu)
ரஊப் ஹக்கீம் தனது உரையில், ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்று இறுமாப்போடும் ஆணவத்தோடும் செயற்பாடாதீர்கள் முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை தாருங்கள் எனும் செய்தியை ரஊப் ஹக்கீம் எடுத்துரைத்தார்.
எதிர்கட்சித்தலைவர் தன் உரையில்
இம்மாநாடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வெற்றியை பறை சாற்றி நிற்கிறது மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரசுடன் இணைத்து செயற்படுகிறோம் இன்றும் ஜனாப் ரஊப் ஹகீம் அவர்களோடு இணைத்து செயற்படுகிறோம் ஒன்றிணைந்த தேசியத்துக்குள் சிறுபான்மையினரின் உரிமைகளை பெற்றுக்கொள்ளுவோம் என்றார்.
இம்மாநாட்டின் மூலம் இந்த உலகுக்கு முக்கிய செய்தியையும் விடுத்தார் எதிர்கட்சித்தலைவர் பிரதேச வாதத்தையும் பிரிவினை வாதத்தையும் பேசும் இனவாதிகளுக்கு நாட்டை ஒரு போதும் துண்டிக்க இடமளிக்க மாட்டோம் ஒரே தேசியம் ஒரே நாடு எனும் செய்தியை எடுத்துரைத்தார் -எதிர்க் கட்சி தலைவர் இரா சம்பந்தன்
பிரதமர் தனது உரையில்
இந்த நாட்டில் நாம் முன்மொழிந்த செயத்திட்டன்களை ஒவ்வொன்றாக செயற்படுத்தி வருகிறோம் ஊழல் வாதிகளுக்கு இடமில்லை.மகிந்த அரசில் ஊழலால் சேதமடைந்த நாட்டை நெறிப்படுத்த சிறந்த திட்டங்கள் முன்னெடுக்கிறோம் பல வெளிநாடும் உதவிக்கரம் நாட்டி உள்ளது.. முஸ்லிம் காங்கிரசோடு இணைத்து முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவுள்ளோம் எனும் செய்தியையும் விடுத்தார்..
ஜானதிபதி தன்னுரையில்
இந்த மகாநாட்டுக்கு மிகுந்த விருப்பத்துடனேயே கலந்து கொள்ள வந்தேன்..கடந்த ஜானதிபதி தேர்தல் காலத்தில் வந்த எனக்கு இந்த பிரதேசத்துக்கு மீண்டும் வர அழைப்பு விடுத்த முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் நன்றி கூறுவதோடு இந்த நாட்டில் கஷ்டப்பட்டு சிறுபான்மையினரான முஸ்லிம், தமிழ் மக்கள் அதே போல சிங்கள மக்களின் உதவியோடும் கொண்டு வந்த ஆட்சியை குழப்ப நினைக்கும் யாருக்கும் இடமளிக்க மாட்டோம். அதே போல இன்று மின் வெட்டும் எங்களை கூறுகின்றனர் கடந்த 10 ஆண்டுகளில் மின் பிரப்பக்கிகளில் எந்த வித பராமரிப்பும் இல்லாமல் இருந்தமை தான் இவற்றுக்கெல்லாம் காரணம். அதே போல ஒரு சிலர் கொழும்பில் மக்களை கூட்டி ஆர்பாட்டம் செய்கின்றனர்.
ஆட்சி மாற்றம் கோரி. இவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் இந்த கூக்குரளுக்கெல்லாம் பயந்தவன் நான் இல்லை அவர்களுடன் ஆட்சியில் இருந்தவன் நான் அவர்களுக்கு பயந்திருந்தால் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முன் வந்திருக்க மாட்டேன் மகிந்தவுக்கும் மகிந்தவின் அடி வருடிகள் எவருக்கும் இந்த அரசை 5 வருடத்துக்கு அசைக்க முடியாது. அதே போல மறைந்த தலைவர் முஸ்லிம்களுக்காக உருவாக்கிய இந்த கட்சி அவர் சிறப்பாக வழி நடாத்தியது மட்டுமல்லாமல் அதன் பின்னர் தலைமை ஏற்ற தற்போதைய தலைவர் ஒரு சிறந்த ஆளுமை மிக்க ஒருவர் இவர் முஸ்லிகளுக்கு அயராது பாடு படுவதோடு எந்த அரசிலும் எந்த அமைச்சை கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்யக்கூடியவர் எனும் செய்தியையும் சந்தோசமாக கூறிக்கொள்கிறேன் எனும் செய்தியையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.