பிரதான செய்திகள்

பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டம்!-ஜனாதிபதி-

இலங்கை தனியார் கடன் வழங்குனர்களுடனான கலந்துரையாடலுக்கு முன்னர் பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று (26) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் ஒரே மேடையில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இதற்கிடையில், இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்து உரையாற்றி ஜனாதிபதி, 2022 ஜூலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, இலங்கை இப்போது மீண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

எனவே, நாட்டின் மறுமலர்ச்சிக்கான முயற்சிகளில் முழு நாடும் இணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related posts

கட்டிய கணவனை கொல்ல பேஸ்புக் காதலனுடன் திட்டம் தீட்டிய மனைவி

wpengine

ரணிலுக்கு தலையிடியாக மாறிய சஜித்

wpengine

முசலி கோட்டத்தின் அசமந்த போக்கு கவனம் செலுத்தாத மன்னார் வலையக் கல்விப்பணிப்பாளர்

wpengine