உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாரிய தொகை ஹெரோயின் கடத்தல்! மூன்று பெண்கள் தொடர்பு

நாட்டில் மீட்கப்பட்ட பாரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் பங்களாதேஷில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மீட்கப்பட்ட பெருந்தொகை ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பங்களாதேஷ் போதைப் பொருள் ஒழிப்பு படையணியினரால் குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 23 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்களிடமிருந்து 1970 போதை வில்லைகளும், பணம் மற்றும் கடவுச்சீட்டு என்பன மீட்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த ஐந்து பேரும் சர்வதேச போதைப் பொருள் விநியோக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் தெஹிவளை பகுதியில் வைத்து 3336 மில்லியன் ரூபா பெறுமதியான 278 கிலோ கிராம் ஹெரோயின் பொதைப் பொருள் மீட்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Related posts

அமைச்சர் றிஷாட்டை பேஸ்புக்கில் விமர்சனம் செய்ய! ஊடக மாபியாக்களை கூட்டிசெல்லும் ஹக்கீம்

wpengine

பொருளாதார நிலையம் தொடர்பில் கூட்டமைப்பு சந்திப்பு

wpengine

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துக்கள்

wpengine