பிரதான செய்திகள்

பாரிய ஊழல் மோசடிகள் ரணில் விவாதம்

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்தஅறிக்கைகள் தொடர்பில் விவாதிக்க பெப்ரவரி மாதம் 8ம் திகதி நாடாளுமன்றத்தைகூட்டவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

தெனியாயவில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு சபாநாயகரை சந்தித்த போது இது குறித்து அவரிடம் கூறியதாக பிரதமர்தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பெப்ரவரி 8ம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாகவும், அது தொடர்பானகடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அனுப்பிவைக்க உள்ளதாகவும் சபாநாயகரிடம் தாம்கூறியதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு அறிக்கைகள் தொடர்பில் முடிந்தால், எதிர்வரும் 10 ஆம் திகதிதேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துமாறு ஜனாதிபதி அண்மையில் சவால்விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் பிரதமர் ரணில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related posts

தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் கோட்டாவை நிராகரித்திருந்தார்கள்

wpengine

பொலன்னறுவையில் குரங்குகளின் அட்டகாசம்- பறிபோனது அப்பில் தொலைபேசி உட்பட முக்கிய ஆவணம்

wpengine

நாமல் குமாரவின் தொலைபேசி சர்வதேச பகுப்பாய்வுக்கு

wpengine