Breaking
Mon. Nov 25th, 2024
(எம்.ரீ. ஹைதர் அலி)
அபிவிருத்தி திட்டங்கள் தேர்தல்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுவதற்கு மாற்றமாக மக்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் முன்னுரிமையளித்து திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக்கின் முயற்சினால் சுமார் 60 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட மீன்பிடி இலாகா வீதி மற்றும் 1 கோடி ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட கடற்கரை மெரைன் ரைவ் வீதி என்பனவற்றை உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு 2017.04.08ஆந்திகதி-சனிக்கிழமை நடைபெற்றது. மீன்பிடி இலாகா வீதியில் நடைபெற்ற இவ்வீதி கையளிப்பு ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
கடந்த தேர்தல் காலம் ஒன்றினை மையப்படுத்தி இவ்வீதியினை புனரமைப்பு செய்வதற்காக ABC எனப்படும் கொங்ரீட் கலவைகள் கொட்டப்பட்டு மிக நீண்ட நாட்களாக புனரமைப்பு செய்யப்படாமல் கைவிடப்பட்டதன் காரணமாக இப்பிரதேசத்தில் உள்ளவர்களும் இவ்வீதியினை பயன்படுத்துகின்றவர்களும் அதிக சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

எனவே நாங்கள் இவ்வீதியினை உடனடியாக புனரமைப்பு செய்ய வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சின் பலனாக தற்போது இவ்வீதி மிகவும் சிறந்த முறையில் கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வீதிகள் மாத்திரமல்லாது இப்பிரதேசத்தில் மிகவும் பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களை மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள் நாங்கள் கிழக்கு மாகாண சபை மூலமாக முன்னெடுத்து வருகின்றோம்.

மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்திக்கென அதிகளவான நிதிகளை ஒதுக்கி தற்போது அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. சுகாதார துறை சார்ந்த அபிவிருத்திக்கென மாத்திரம் சுமார் இரண்டரைக் கோடி ரூபாய்களை நாங்கள் ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். அதே போன்று இப்பிரதேசத்தில் பாரிய வீதி அபிவிருத்திகளையும் மேற்கொண்டுள்ளதோடு ஐ ரோட் திட்டத்தினூடாக மேலும் பல வீதிகளை காபெட் வீதிகளாகவும் புனரமைக்க உள்ளோம்.
இவ்வாண்டு இறுதியில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் ஐ ரோட் வேலைத்திட்டத்தினை தாங்களே மேற்கொள்வதாக கூறி மக்களை ஏமாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் ஐ ரோட் வேலைத்திட்டமானது முழுமையாக கிழக்கு மாகாண சபை மூலம் நடைமுரைப்படுத்தப்படவிருக்கும் ஒரு வேலைத்திட்டமாகும். இதில் டீன் வீதி, மத்திய வீதி, அப்றார் வீதி உள்ளிட்ட பல முக்கிய வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் இந்த வேலைத்திட்டத்திற்கும் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கும் எத்தகைய சம்மந்தமும் கிடையாது எனவும் தனது உரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் U.L.M.N.முபீன் (B.A) காத்தான்குடி நகரசபையின் முன்னாள் மேயர் மர்சூக் அஹமட் லெப்பை, காத்தான்குடி நகர சபையின் செயலாளர் S.M.M. ஸபி ஆகியோர் உற்பட பல முக்கிய ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *