பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கருணாவுடன் சேர்ந்து மஹிந்த அணிக்கு ஆதரவு

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியிருந்த சதாசிவம் வியாழேந்திரன் நாடாளுமன்றத்தில் தனித்து செயற்ப்பட்டு வந்த விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து வந்த விநாயகமூர்த்தி முரளிதரனுடன் (கருணா) இணைந்துபொதுஜன பெரமுனவின் மாவட்ட காரியாலயத்திற்கு சென்று கட்சியின் மாவாட்ட இணைப்பாளர் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை சந்தித்துள்ளார்.

என்று மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற பொது ஜன பெரமுன முக்கியஸ்தர்களின் சந்திப்பின் போது முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திர, மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோர் இணைந்து ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை வெற்றியடைய செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கை நெய்னார் நினைவு விழாவும் சிறப்பு மலர் வெளியீடும்

wpengine

மகிந்த ஜனாதிபதி பதவியை மட்டுமல்ல பிரதமர் பதவிக்கும் தெரிவாக முடியாது

wpengine

மன்னாரிலும் ,நாவலப்பிட்டியிலும் ஆட்டோ திடீர் தீ

wpengine