பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்

நேற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டமொன்றையும் இதன்போது நடாத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவி வகித்த போது பல மில்லியன் பெறுமதியில் கட்டிட வசதிகளும், 40 மில்லியனுக்கு மேற்பட்ட பெறுமதியில் சத்திர சிகிச்சைக்கு தேவையான வைத்திய உபகரணங்களும், ஏனைய உபகரணங்களும் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு பெற்றுக்கொடுத்தமை இவ்விடத்தில் குறிப்பிட்டுக்கூற வேண்டிய விடயமாகும்.1622259_1597000040585870_8016989626420761402_n

மேலும் வைத்தியசாலை நிர்வாகத்தோடு இதன் போது இடம்பெற்ற அபிவிருத்தி மீளாய்வு முன்னேற்ற கூட்டத்தில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளை அதி உச்ச நிலைக்கு கொண்டு செல்ல எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.535112_1596999967252544_4424343513073269735_n

எதிர்காலத்தில் இதற்கான முழு முயற்சிகளையும் எடுத்து சம்மாந்துறையின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதாக இதன்போது உறுதியளித்தார். அத்துடன் வைத்தியசாலையின் சகல பிரிவுகளையும் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தினையும் முழுமையாக பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அதில் இடம்பெறும் சிகிச்சைகள், மேலதிகமாக தேவைப்படும் வசதிகள் தொடர்பாகவும், கேட்டறிந்து கொண்டார்.

Related posts

வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் நான்கு பேரின் பணித்தடையை நீக்கக்கோரி கடிதம்.

wpengine

முள்ளியவளை கிராம மக்கள் பாதிப்பு! அமைச்சர் றிஷாட் பணிப்புரை

wpengine

பெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது?

wpengine