Breaking
Sun. Nov 24th, 2024

(எம். என். எம். பாரிஸ் சிலாவத்துறை)

கௌரவ பா.உ அவர்களே உங்களது கடந்த கால பாராளுமன்ற வாத பிரதிவாதங்கள் வடக்கு முஸ்லீம்களின் மனதில் பால் வார்க்கின்றது . அவ்வளவு இனிமையாக உங்களது இனவாதம் இருந்தது.

அதிலும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறையின் நகரமயமாக்களை தடுத்து நிறுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

வாழவந்தோரை வாழவைப்பதில் மன்னார் மாவட்டமும் குறைவைக்க வில்லை. அதேபோல் சிலாவத்துறை நகரமும் குறைவைக்க வில்லை .

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த உங்களை எவ்வாறு மன்னார் மாவட்டம் வாழ வைத்ததோ அதே போல் பல ஆயிரக்கணக்கான யாழ் மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களில் இருந்து வந்த அனைத்து தமிழர்களையும் சிலாவத்துறை நகரம் சுமந்து வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.

நீங்கள் தடுக்க நினைப்பது சிலாவத்துறை முஸ்லீம்களின் அபிவிருத்தியை அல்ல. உங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களின் அபிவிருத்தியை .

கௌரவ பா.உ அவர்களே உங்களுக்கு ஒரு சில விடயங்களை ஞாபகமூட்டளாம் என நினைக்கிறேன்.

யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்ற காலங்களில் உங்களை போன்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலில் துளங்காத காலங்களில் அன்றைய மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் மன்னார் மாவட்ட தமிழ் மக்களுக்கும், சிலாவத்துறை வாழ் தமிழ் மக்களுக்கும் செய்த சேவைகளை ஒரு நிமிடம் நிதானமாக உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நினைத்துப் பார்க்குமாறு தாழ்மையாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

முசலிப் பிரதேசத்தில் இருட்டில் கிடந்த என் உயிர் தமிழர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது ஒரு முஸ்லீம் பிரதிநிதி என்பதை நினைத்துப் பார்க்கும் போது . மார்பு தட்டிக் கொள்கிறேன் பெருமையுடன்.

30 வருட கால அகதி வாழ்க்கையில் சிங்கள மக்களுடன் இனைந்து வாழும் போது ஒரு நாள் கூட கவலை பட்டதில்லை அகதியாக வாழ்கிறோம் என்று .

ஆனால் சொந்த மண்ணில் மீள்குடியேறிய இந்த குறுகிய காலத்திற்குள் பல முறை வேதனை பட்டிரிக்கிறோம் ஏன் இந்த யுத்தம் முடிவடைந்தது என்று .

பா.உ அவர்களே! பிரவிக் குணங்கள் மனிதநிடத்தில் மாறுவது இல்லை உண்மைதான். ஆனால் கொஞ்சமாது அதை கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள் அப்போதுதான் மனித நேயம் கொஞ்சமாவது கிடைக்கும்.

இலங்கை திருநாடு மூவினமும் பின்னிப் பிணைந்த நாடு இதில் ஒவ்வொறு இனமும் தனித்து வாழ தலைகுப்புற நின்றாலும் முடியாத காரியம்.

இப்படியான ஒரு நாட்டின் அரசியலில் கௌரவ பா.உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களே நீங்கள் இனவாத ஆயுதத்தை கையில் எடுத்தது எதற்காக?

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காகவா ? ஒரு போதும் இல்லை

நீங்கள் அரசியலில் உயர இடத்தை பிடிப்பதற்காக எனது சகோதர பாமர தமிழ் மக்களின் மனதில் இனவாத உரமூட்டுகிறீர் .

காரணம் உங்களது பாராளுமன்ற உரைகளில் அதிகம் இனவாதம் பேசப்படுகிறதே தவிர தமிழ் சகோதரர்களின் அரசியல் அபிலாஷைகள் பற்றி பேசுவதை பற்றி இதுவரை காலமும் நான் கேட்கவில்லை.

கௌரவ பா.உ அவர்களே இனவாதத்தை கையில் ஆயுதமாக எடுத்து அழிந்து போன சரித்திரங்களே அதிகம் இருக்கின்றது . வாழ்ந்த சரித்திரம் இல்லை.

தமிழ் பேசும் மக்கள் அனைத்தையும் இழந்து இப்போதுதான் ஒரு சுபீட்சமான ஓரளவு நிம்மதியான வாழ்க்கை நீரோட்டத்திற்குள் காலெடுத்து வைக்கின்றோம் .

உங்களது சொட்ப அரசியல் ஆசைக்காக மீண்டும் எங்களையும் எங்ளது நாட்டையும் யுத்தப் படுகுழியில் தள்ளாதீர்கள்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *