Breaking
Mon. Nov 25th, 2024

(நாச்சியாதீவு பர்வீன்)

அநுராதபுரம் மாவட்டத்தின் தமிழ்மொழி மூலப் பாடசாலைகளின் பெளதீகவளக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக கெளரவ அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க கெளரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 04 கல்வி வலயங்களில் உள்ள 30 தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


இதுவரை காலமும் அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மை இன மக்களிற்கு கிடைக்காத பெரும் நன்மையை அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பெற்றுக்கொடுத்திருப்பது வரலாற்றுப் பதிவாகும்.

அநுராதபுர மாவட்ட தமிழ் மொழிக்கல்வியை வளர்ப்பதே தனது பிரதான நோக்கம் என தேர்தல் காலத்தில் தனது தேர்தல் விஞ்ஞானத்தில்  பாராளுமன்ற  உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்திருந்தார். தற்போது அவரது செயற்பாடுகள் அதனை நிறூபித்து நிற்கிறது எனலாம்.

அநுராதபுரம் கல்வி வலயம்
1. இக்கிரிகொல்லாவா மு.ம.வி               51 மில்லியன்
2. நாச்சியாதீவு மு.வி                              02 மில்லியன்
3. நொச்சியாகம மு.வி                           02 மில்லியன்.
4. அளுத்கம தாருஸ்ஸலாம் மு.வி         0.5 மில்லியன்.
5. இஹலகொடியாவ மு.வி                    0.5 மில்லியன்
6. மனாருல்உளூம் மு.வி                        05 மில்லியன்
7. கிவுலேகட மு.வி                                 0.5 மில்லியன்

கலன்பிந்துனுவ கல்வி வலயம்
1. முக்கிரியாவ மு.வி                         40 மில்லியன்
2. கனந்தரா கட்டுகெலியவ மு.வி     05 மில்லியன்
3. ஈதல்வெட்டுனுவெவ மு.வி            02 மில்லியன்
4. கஹடகஸ்திகிலிய மு.வி              05 மில்லியன்
5. கஹடகஸ்திகிலிய ஆ.பா.          12.5 மில்லியன்
6. நெலுகொல்லாகட மு.வி ல.        0.5 மில்லியன்
7. ஹெட்டியாவ மு.வி                       0.5 மில்லியன்
8. தானக்காவ மு.வி                         0.5 மில்லியன்

கெப்பிதிகொல்லாவ கல்வி வலயம்
1. கெப்பிதிகொல்லாவ மஹ்மூத் மு.வி        07 மில்லியன்
2. அங்குநொச்சிய மு.வி.                            52 மில்லியன்
3. மதவாச்சி மு.வி                                       02 மில்லியன்
4. ஹொரவபொதான முஸ்லிம் ஆ.பா        12.5 மில்லியன்
5. கல்கடாண்டுவ மு.வி                              0.5 மில்லியன்

கெக்கிராவை கல்வி வலயம்
1. கலாவெவ மு.ம.ம.வி                             54 மில்லியன்
2. கெக்கிராவை மு.வி.                             02 மில்லியன்
3. பமுனுகம மு.வி.                                    17 மில்லியன்
4. கனேவல்பொல மு.வி.                           37 மில்லியன்
5. கட்டுகெலியவ முஸ்லிம் ஆ.பா.             12.5 மில்லியன்
6. புதிய தென்னாவை அன்னூர் ஆ.பா.      0.5 மில்லியன்
7. நேகம மு.வி.                                           14 மில்லியன்
8. அல் அஸ்கர் மு.வி. கட்டியாவ               0.5 மில்லியன்
9. கடாண்டுகம ஜாயா மு.வி.                     40 மில்லியன்
10. பலளுவெவ மு.வி.                                02 மில்லியன்

மீதியுள்ள பாடசாலைகளுக்கான நிதியொதுக்கீடு 2017 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படும் என பாராளமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *