தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பாராளுமன்ற இணையதளம் முடக்கம் ; அமைச்சர்கள் அச்சத்தில்

இங்கிலாந்தில் உள்ள சுகாதார இணையதளங்களை தொடர்ந்து பாராளுமன்ற இணையதளத்தை மர்ம மனிதர்கள் முடக்கியுள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் உள்ள சுகாதார இணையதளத்தினை மர்மநபர்கள் முடக்கினர்.அதை தொடர்ந்து, தற்போது பாராளுமன்றத்தின் இணையதளத்தை மர்ம கும்பல் ஹேக்கிங் மூலம் முடக்கியுள்ளனர்.

எனவே, பாராளுமன்ற இணைய தளம் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் மற்றவர்களுக்கு சென்றடைவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பாராளுமன்றம் மூலம் அமைச்சர்களுக்கு அனுப்பக்கூடிய மின்னஞ்சல்கள் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க முடியவில்லை. இதை யார் செய்தார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது. தீவிரவாத குழுக்களை சேர்ந்தவர்கள் இதை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும், குறித்த சைபர் தாக்குதலின் மூலம் அமைச்சர்கள் மிரட்டலுக்கு உட்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச செய்திகள் தெரவிக்கின்றன

Related posts

முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்களவர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்- ஞானசார

wpengine

ராஹுல் காஸ்ட்ரோ தனது 89 ஆவது வயதில் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

wpengine

சண்டித்தனம் காட்டிய கூட்டமைப்பின் மன்னார் நகர சபை தவிசாளர்! முசலி அரசியல்வாதிகள் வாய்மூடி மௌனம்

wpengine