பிரதான செய்திகள்

பாராளுமன்ற ஆர்ப்பாட்டம்! கோத்தா- சம்பந்தன் விரைவில் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தத் தகவலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தினார். 

ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்புகள் வெளியாகி இருந்தபோதும், அவை நடைபெற்றிருக்கவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தால் இந்தச் சந்திப்பு குறித்த அறிவித்தல் நேற்று கூட்டமைப்பின் தலைமைக்கு வழங்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் சமல் ராஜபக்சவும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கில் இடம்பெறுகின்ற காணி சுவீகரிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்மையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு!

Editor

காலி முகத்திடலில் குப்பையான ஹரிஸ்,அலி,ஹாபீஸ்,தௌபீக்,முஷ்ரப்

wpengine

ரணில்,மைத்திரி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு தீர்வில்லை! தலைமைகள் மௌனம்

wpengine