அப்போதைய நல்லாட்சிஅரசாங்கம் சிங்கப்பூருடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் போது, அப்போது எதிர்கட்சியாகவும் இப்போது ஆளும் கட்சியாகவும் உள்ளவர்கள் தேவையற்ற கருத்துகளை முன்வைத்தனர். ஒப்பந்தம் கைச்சாத்தானால் சிங்கப்பூர் பிரஜைகள் இங்கு தொழில் வாய்ப்பை பெறுவர் உள்ளிட்ட போலியான குற்றச்சாட்களைய முன்வைத்தனர் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா, ஆனால் அவர்கள் அன்று கதைத்ததை விட மிகவும் மோசமான விடயத்தை தான் இன்று செய்கின்றனர் என்றார்.
இன்று (18) எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
துறைமுக நகரில் சிங்கப்பூர், சீனா, அமெரிக்க எந்த வேறுபாடும் இல்லை எவரும் இங்கு தொழில் செய்யலாம் . ஆனால் இதனை வெற்றிகரமாக செய்ய வேண்டுமாயின் எமது இலங்கை சட்டத்துக்கு அமைய செயற்படுத்த வேண்டியுள்ளது என்றார்.
இச் சட்டமூலத்தை இலங்கை பாராளுமன்றத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். சகலரும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில், நீதி கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வேலைத்திட்டத்தை செய்துகொள்ள முடிந்தால். உலகில் உயர் மட்ட முதலீட்டாளர்களை அழைக்க முடியம் என்றார்.
உலகில் ஏற்றுகொள்ளப்பட்ட பிரபல வங்கிகைளை அழைத்து வர முடியம். ஆனால் பாராளுமன்றத்தை எட்டி உதைத்து விட்டு நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதிக்கு சட்டத்தை உருவாக்கும் சந்தர்ப்பத்தை வழங்கி, சகல ஒழுங்குப்படுத்தல்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டு இதனை செய்ய முயற்சித்தால் அனைத்தும் தோல்வியடையும் என்றார்.