உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் பேஸ்புக் மார்க் ஜுக்கர்பெர்க்

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்இ பேஸ்புக் நிறுவனமும் தனது தவறை ஒப்புக்கொண்டது. அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில் தகவல் திருட்டு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆலோசனை நடத்தி உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.

இதுதொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற அவைத்தலைவர் அந்தோனியோ டஜானி வெளியிட்டுள்ள அறிக்கையில்  அடுத்த வாரத்தில் 8 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்த போட்டித்தன்மையால் யாருக்கு என்ன பயன்? அமைச்சர் டெனீஸ்வரன்

wpengine

41 இலங்கைப் பெண்கள் சவூதியில் நீண்டகாலமாக தடுத்து வைப்பு!

Editor

மன்னார் மாவட்ட மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை

wpengine