பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பாராளுமன்றத்தில் இந்துகளை கொஞ்சைப்படுத்திய அடைக்கல நாதன் பா.உ

வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை இந்துக்களின் மனதை புண்படுத்தியதையிட்டு மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் மன வேதனை அடைகின்றது.
திருக்கேதீஸ்வர வளைவு அடித்து நொருக்கப்பட்டதும் நந்திக்கொடி காலால் மிதித்து அவமதித்த நிகழ்வும் ஒரு பிரச்சனையாகிவழக்கும் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் அது விடயமாக எந்தவிதமான கருத்து கூறுவதும் நீதி மன்றத்தை அவமதிக்கும் செயல் என்பதால் அந்த விடயத்தைப் பற்றி கதைக்காமல் அந்த பிரச்சனையை நீதி மன்றம் தீர்க்கும் வரை எவ்விதமான கருத்தையும் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்பதை இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் நிர்வாகிகள் குழு கூடி தீர்மானித்திருந்தது.

இருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் 03.04.2019 அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சிவபெருமானின் கையிலே இருக்கும் பிச்சைப் பாத்திரத்தின் மூலம் அவர் மக்களின் வீடு வீடாக சென்று அவர்களின் பாவத்தை ஏற்றுக் கொண்டு புண்ணியங்களை செய்தார் என்று கூறப்படுகிறது என்று கூறியிருந்தார்.

இது என்ன புதுக்கதை என்று சைவ மக்கள் சிலர் வியப்படைகிறார்கள் அதிசயப்படுகிறார்கள்.

ஆனால் பலர் சைவத்திற்கு மாறான கருத்துக்களை ; பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின்; கூறியதை கேட்டு வேதனைப்படுகிறார்கள்.

ஏந்த உண்மையையும் அறியாமல்; சைவசமயத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் பாராளுமன்றத்தில் சிவநிந்தனை செய்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு இந்து ஆலயங்களின் ஒன்றியம் தனது வேதனையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

Related posts

பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ரெலோ அழைப்பு

wpengine

மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராய புதிய குழு

wpengine

ரிஷாட்டை வீழ்த்தும் முயற்சியில் மீண்டும் களமிறங்கியுள்ள மு.கா சதிகாரர்கள்

wpengine