உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

“பாரத் மாதா கி ஜே’ கோஷத்தை எழுப்ப முடியாது! அசாதுதீன் ஒவைஸிக்கு எதிராக தேசத் துரோக வழக்கு

நீதிமன்றத்தில் மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைஸிக்கு எதிராக தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தில்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி முனீஷ் மார்கன் முன்னிலையில், ஸ்வராஜ் ஜனதா கட்சித் தலைவர் பிரிஜேஷ் சந்த் சுக்லா என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தேசத் துரோக குற்றச்சாட்டு, இருதரப்பினர் இடையே மோதலை உருவாக்குவது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி தில்லி கராவல் நகர் காவல் நிலைய அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீது தில்லி நீதிமன்றத்தில் வரும் 22ஆம் தேதி விசாரணை நடத்தப்படவுள்ளது.

“பாரத் மாதா கி ஜே’ கோஷத்தை எழுப்ப முடியாது என்று ஒவைஸி மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒவைஸிக்கு எதிராக புணேயைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல வழக்கைத் தொடுத்துள்ளார்.

Related posts

முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தீர்மானம்!

Editor

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றவரையே எனது அரசாங்கத்தில் பிரதமராக நியமிப்பேன்.

wpengine

ஊடகவியலாளர்கள் எவரும் இங்கு வரவில்லை ரணில் கவலை

wpengine