Breaking
Sat. Nov 23rd, 2024

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை ஒட்டி தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி சேவையால் உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கவிதை போட்டியில் பங்கேற்றஊடகவியலாளர் கவிஞர் தர்மகுலசிங்கம் தர்மேந்திராவுக்கு பாராட்டு சான்றிதழ் கிடைக்க பெற்று உள்ளது.


சர்வதேச மட்டத்திலான போட்டியில் பங்கேற்று கவிதை திறமையை வெளிக்கொணர்ந்து இருப்பதை நயந்து இச்சான்றிதழை வழங்கி இருப்பதாக தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி சேவை நிர்வாகம் அறிவித்து உள்ளது.


ஊடகவியலாளர் கவிஞர் தர்மகுலசிங்கம் தர்மேந்திரா யாழ்ப்பாணத்தில் அரியாலையை சொந்த இடமாக கொண்டவர். யாழ். நல்லூர் ஆனந்தா வித்தியாசாலை, யாழ். பரியோவான் கல்லூரி, யாழ். இந்து கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவன். வித்துவான்களான சொக்கன், சேந்தன் ஆகியோரிடம் பால பண்டிதர் வகுப்பில் முறைப்படி யாப்பு இலக்கணம் படித்தவர். 


பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ் தின போட்டியில் மேல் பிரிவில் கவிதை ஆக்கத்தில் முதலாம் இடத்தை பெற்று தங்க பதக்கம் வென்றவர் ஆவார். இவருடைய ஏராளமான கவிதைகள் உதயன், வீரகேசரி, தினக்குரல், தினகரன் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.


வீரகேசரி, தினக்குரல், சுடரொளி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் அலுவலக ஊடகவியலாளராக, உதவி ஆசிரியராக கடமையாற்றிய இவர் தற்போது அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில் இருந்து ஊடக பணியை மேற்கொண்டு வருகின்றார்.


தமிழ் அமெரிக்கா நடத்திய கவிதை போட்டியில் பாரதியில் எனக்கு பிடித்தது என்கிற தலைப்பில் காணி நிலம் வேண்டும் என்கிற வரிகளை முன்னிறுத்தி கவிதை புனைந்து  சமர்ப்பித்து உள்ளார்.


இவரின் கவிதையை பின்வரும் இணைப்புக்கு சென்று இரசிப்பதுடன் உங்கள் விருப்பங்கள், பின்னூட்டங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *