ஒரு நாட்டுடன் மட்டும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொள்வது தற்போதைய சூழ்நிலையில் பெரும் ஆபத்தான ஒரு விடயம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையடுத்து, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாதுகாப்பு உடன்படிக்கை உட்பட 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இவ்வாறு பாதுகாப்பு உடன்படிக்கையை ஒரு நாட்டுடன் கைச்சாத்திடுவது ஏனைய நாடுகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் என சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இலங்கைக்கு உதவி தேவைப்படும் போது எந்த வித நிபந்தனைகளும் இல்லாது உதவி செய்த சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இதனால் அதிருப்தி அடையும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், எமது நாட்டின் சுயாதீனத் தன்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.