Breaking
Sun. Nov 24th, 2024
SAMSUNG CSC
(அஷ்ரப் ஏ.சமத்)
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றம் என்ற அரச சாா்பற்ற நிறுவனம்  ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிரேஸ்ட  சட்டத்தரணி நஜீம், மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் ஊடகவியலாளா்கள் புத்தி ஜீவிகள் சமுக சேவை உறுப்பினர்கள் இவ் அமைப்பில் அங்கம் வகிக்கின்றனா்.

 இவ் நிறுவனம் கொழும்பு மாவட்டத்தின் வாழும் மக்களது கல்வி, வீடு, சுகாதாரம், பொருளாதாரம் அனா்த்தம், சம்பந்தப்பட்ட   பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.  இந் நிறுவனத்தின் முதல் கட்டமாக கடந்த வாரம் கொழும்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1 இலட்சம் பேர் அல்லது 14ஆயிரம் குடும்பங்கள் தமது உரைவிடம், வீட்டுப் பாவணைப் பொருட்கள், சிறுகடைகள், வியாபாரங்களை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு எதிா்வரும் நோன்பு காலத்தில் உதவுவதற்காக ஒரு திட்டத்தனை வகுத்துள்ளதாகவும் இம் மக்களது சகல விபரங்களும் தமது  அலுவலகத்தில் பதியப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தாா்.

எதிா்வரும் நோன்பு காலத்தில் முஸ்லீம்கள் தனவந்தா்கள் முஸ்லீம் ஸ்தாபனங்கள்  தமது ஸக்காத் நிதியங்களை  கொடுக்க விரும்பினால் எமது நிறுவனம் அல்லது அலுவலகத்தில் சகல தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அக் குடும்பங்களை நேரடியாகவோ அல்லது அவா்களது வங்கி இலகங்களை பெற்று அம்மக்களது வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தாா்.

இத் தகவல்களை நேற்று (26) கொழும்பு ஆவண நுாலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநட்டிலேயே பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான் இத்தகவல்களைத் தெரிவித்தாா்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *