பிரதான செய்திகள்

பாதயாத்திரையிலீடுபட்டோரின் அருவருக்கத்தக்க செயல்

பேராதெனியவில் உள்ள ஹெட்டம்பே விகாரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று காலை பாதயாத்திரை ஆரம்பமானது.

பாதயாத்திரை ஆரம்பமானபோது விகாரைக்கு முன்னால் உள்ள வீதியால் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி மீது பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அரசுக்கு எதிராகவும் நாட்டு மக்களை பாதுகாக்கவும் முன்னெடுக்கப்பட்ட குறித்த பாதயாத்திரையின் போது இவ்வாறான சம்பவம் ஏற்பட்டுள்ளமையானது மிகவும் அருவருக்கத்தக்க செயலாக காணப்படுகின்றது.

குறித்த அம்பியூலன்ஸ் வண்டியின் கண்ணாடி உடைக்கப்பட்டதுடன் வண்டியினுள் இருந்த நோயாளி மற்றும் சாரதியை பேரணியிலீடுபட்டோர் அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

சம்மாந்துறையில் பிள்ளையொன்றை சித்திரவதைக்கு உட்படுத்திய பெண் கைது

wpengine

அரச சேவையாளர்களுக்கு 2 வாரங்களில் வாகன உறுதிப்பத்திரங்கள்

wpengine

வடகொரியாவை மீரட்டும் பிரித்தானிய பிரதமர்

wpengine