செய்திகள்பிரதான செய்திகள்

பாடசால பாலியல் துஷ்பிரயோகம்  – 1929 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு.

24 மணிநேரமும் சேவையில் இருக்கும் இலக்கக்கமான 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே, பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றால் பாடசாலை அதிபர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு அளிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ncpa@childprotection.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடு அளிக்க முடியும்.

அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்கு சென்றும் ( இல. 330, தலவத்துகொட வீதி, மாதிவெல, ஶ்ரீ ஜயவர்தனபுர) முறைப்பாடுகளை அளிக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள்! ஆப்பு வைக்கும் வடக்கு முதலமைச்சர்

wpengine

வட மாகாண எல்லை நிர்ணயத்தில் இழக்கப்போகும் முஸ்லிம் மாகாண பிரநிதித்துவம்

wpengine

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினை குறித்து அமைச்சர் றிசாட் ஆராய்வு

wpengine