பிரதான செய்திகள்

பாடசாலை விடுமுறையில் திருத்தம் கல்வி அமைச்சு வெளியிட்ட புதிய தகவல்!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை தொடரும்.

இந்தநிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ரமலான் வழிபடும் மாதமே தவிர வழிகெடுக்கப்படும் மாதமல்ல.

wpengine

தாதியர் ஒருவரும் இல்லாத 33 வைத்தியசாலைகல் வடக்கில் இருப்பதாக அரசாங்கம் தெரிவிப்பு….

Maash

ரணிலுக்கு ஆதரவாக சஜித் அணி கலத்தில்

wpengine