பிரதான செய்திகள்

பாடசாலை மாணவனுக்கு ஆபாச படம் காட்டியவர் கைது

பாடசாலை மாணவனுக்கு தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய நபர் ஒருவரை கம்பளை பொலிஸார் நேற்று மாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கம்பளை பஸ் நிலைய பிரதேசத்தில் உள்ள வியாபார கடை ஒன்றின் மேல் மாடியில் வைத்து 35 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு தனது தொலைபேசி ஊடாக ஆபாச படங்களை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தினை அவதானித்த சிலர் பொலிஸார்க்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று தொலைபேசியை கைப்பற்றியதுடன் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரனையின் மூலம் தெரியவருவதாவது, பாடசாலை மாணவன்  குறித்த நபருக்கு மருமகன் முறையென தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கம்பளை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

உரமானியத்தை காரணம் காட்டி விவசாயிகளை மீண்டும் எழ்மை நிலைக்கு தள்ளும் அரசு

wpengine

ஜனாதிபதி,பிரதமரை அகற்றுங்கள்

wpengine

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில் இல்லை

wpengine