பிரதான செய்திகள்

பாடசாலை நேரத்தில் கவனம் செலுத்தும் வட மாகாண சபை

வடக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் 2018ஆம் ஆண்டு முதல் காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை அவதானம் செலுத்தியுள்ளது.

வட மாகாண பாடசாலைகள் 7.30க்கு ஆரம்பிக்கப்படுகின்றமையினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் வடமாகாண கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசேடமாக வட மாகாண சபையின் கிராம பிரதேசங்களில் இருந்து நகர பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களுக்கு போதுமான அளவு போக்குவரத்து வசதிகள் இல்லை.
இதனால் காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகும் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள் காலை உணவை பெற்றுக் கொள்ளாமல் பாடசாலைக்கு வருகின்றனர்.

இதன் காரணமாக மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் மேற்கொள்ள முடியவில்லை என ஆசிரியர்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை கருத்திற் கொண்டு 8 மணிக்கு பாடசாலையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை முதலமைச்சரிடம் அனுப்பி வைப்பதாகவும், அதற்கு ஆளுநரிடம் அனுமதியை பெற்றுக் கொண்டு தகுதியான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மாகாண கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இளவரசர் ஹரியின் திருமண மோதிரத்தின் இரகசியம்

wpengine

இராஜாங்க அமைச்சரின் பணிகளை கூட செய்யமுடியவில்லை பிரதமரிடம் முறைப்பாடு

wpengine

சமுர்த்தியில் தேர்வு மட்டத்தை அடைந்தவர்களை கௌரவித்த ஜனாதிபதி

wpengine