செய்திகள்பிரதான செய்திகள்

பாடசாலை கல்வித்துறையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.

கல்விச் சேவையில் அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியத்திற்கும் கல்வி அமைச்சுக்கும் இடையே இன்று (08) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் பாடசாலை கல்வித்துறையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், கல்வி அமைச்சும் பொதுச்சேவை ஆணைக்குழுவும் ஒன்றிணைந்து தீர்மானம் ஒன்று மேற்கொண்டுள்ளதோடு, குறிப்பாக வரவு – செலவு திட்டத்தில் இதற்கான தீர்வு முன்வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டு அதற்கான தீர்வு நடைமுறையில் முன்வைக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

முசலிக்கான விளையாட்டு மைதானம் மஸ்தானின் சுயநல முடிவு! தவிசாளர் சீற்றம்

wpengine

சஜித்துக்கு நான் செய்வேன் தேசிய பட்டியல் பெண்

wpengine

ISIS இயக்கத்தை உருவாக்கியவர் ஒபாமாவா?

wpengine