(அஷ்ரப் ஏ சமத்)
பாக்கிஸ்தானின் 76 வது தேசிய தினம் இன்று (23) கொண்டாடப்படுகின்றது. கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் அலுவலகத்திலும் இன்று காலை உயா் ஸ்தாணிகா் மேஜர் ஜெனரல் செய்யத் சக்கீல் ஹூசைன் அவா்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. உயா் ஸ்தாணிகா் பாக்கிஸ்தான் தேசியக் கொடியை உயா்த்தி வைத்தாா்.
அத்துடன் பிரதித் துாதுவா் கலாநிதி சப்றாஸ் அகமட் , பாக்கிஸ்தான் நாட்டின் பிரதமா் நவாஸ் செரீபின் தேசிய தின செய்தியை வாசித்தாா்.
இலங்கை பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையில் கடந்த 6 தசாப்தங்களாக நட்புறவு உள்ளது. அண்மையில் இலங்கை பாக்கிஸ்தான் நாடுகளின் தலைவா்களுக்கிடையே பல்வேறு பொருளாதார வா்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
அண்மையில் பாக்கிஸ்தானின் உற்பத்தி இறக்குமதி, ஏற்றுமதி வா்த்தகத்தல் கொழும்பு வர்த்தக கண்காட்சியை ஏற்படுத்தியது. அதில் பல்வேறு வா்த்தக உடன்படிக்கை இலங்கை மூலம் கைச்சாத்திடப்பட்டது. குடிநீர், கல்வி, முதலிடல், புலமைப்பரிசல் போன்ற வற்றில் இலங்கைக்கு பாக்கிஸ்தான் உதவி வருகின்றது எனவும் உயா் ஸ்தாணிகா் உரையாற்றினாா்.