பிரதான செய்திகள்

பாகுபலி -2 ஏப்ரல் 14-ந் திகதி………

பிரபாஸ்-அனுஷ்கா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்துள்ள நிலையில், தற்போது இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிரம்மாண்ட போர்க் காட்சிகள் எல்லாம் இரண்டாம் பாகத்தில் இடம்பெறப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தை முதலில் அடுத்த வருடம் ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியிடப்போவதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது, அந்த ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றி வைத்துள்ளனர். அதன்படி, அடுத்த வருடம் ஏப்ரல் 28-ந் திகதி இப்படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த செய்தியை ‘பாகுபலி’ படத்துடன் இணைந்துள்ள தர்மா புரொடாக்ஷன்ஸ் நிறுவனம் உறுதிசெய்துள்ளது. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்காவுடன் ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், சுதீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது. அதைத்தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகளுக்காக நீண்டநாட்கள் எடுத்துக் கொள்ளவிருக்கிறார்கள்.

பாகுபலி படத்தைப் போலவே அதன் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. அந்த எதிர்பார்ப்பையெல்லாம் இரண்டாம் பாகம் நிறைவேற்றும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Related posts

எல்லை நிர்ணயத்தில் ஜம்மியத்துல் உலமா வழி காட்டுமா

wpengine

வவுனியா பாடசாலையில் காதல் வாழ்த்து! பெற்றோர் விசனம்

wpengine

நட்டத்தில் இயங்கும் 55 டிப்போக்களுக்காக பல புதிய நடவடிக்கைகள் – பிமல் ரத்நாயக்க.

Maash