உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாகிஸ்தான் விசாவில் விளையாடும் டிரம்ப்

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அளித்த விசா எண்ணிக்கையில் பாகிஸ்தான் நாட்டிற்கு மிகப்பெரிய அளவிலான மாற்றத்தைக் காட்டியுள்ளது.

இக்காலகட்டத்தில் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்ட விசா எண்ணிக்கை 40 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனால் இந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவிற்கு

பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட விசா 40 சதவீதம் குறைந்த நிலையில் இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்ட எண்ணிக்கை எப்போதுமில்லாத வகையில் 28 சதவீதம் அதிகரித்து வரலாறு காணாத எண்ணிக்கையை அடைந்துள்ளது.

இது டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு ஏற்பட்ட மாற்றங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு ஜாக்பாட்

கடந்த வருடத்தில் ஒரு மாதத்திற்கு அளிக்கப்பட்ட விசாவை ஒப்பிடும் போது இது மிகவும் அதிகம் என அமெரிக்காவின் குடியுரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

டிரம்ப் தடை

அமெரிக்க அதிபரான டிரம்ப் அறிவித்த 7 முஸ்லீம் நாடுகள் விசா தடை பட்டியலில் பாகிஸ்தான் இல்லாத போதும் விசா எண்ணிக்கை 40 சதவீதம் வரை குறைந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல்

பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3,973 விசாவும், ஏப்ரல் மாதத்தில் 3,925 விசாக்கள் மட்டுமே அளிக்கப்பட்டது. இது டிரம்ப் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்

ஓபாமா ஆட்சியில் ஒரு மாத்தின் சராசரி எண்ணிக்கை 6,553 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சஜித்,மஹிந்த பகிரங்க விவாதம்

wpengine

“எழுக தமிழ்’ பேரணியை வெற்றி பெறச்செய்வோம்! சித்தார்த்தன் (எம்.பி) அழைப்பு

wpengine

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

wpengine