பிரதான செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறைத் தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை வ்ழங்கப்பட்டு உள்ளது.

தோஷாகானா எனப்படும் ஊழல் வழக்கில் அவருக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளன என்றும் அதனால் அவரைக் குற்றவாளியாக அறிவிப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இஸ்லாமாபாத் பொலிஸ் இம்ரான் கானை விரைவில் கைது செய்து சிறை அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க அந்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அந்நாட்டுச் சட்டப்படி இம்ரான் கான் இன்னும் 5 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானில் நடக்கும் தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஒகஸ்ட் 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் வெளிநாட்டு பயணங்களில் அவருக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களில் பலவற்றை அரசின் தோஷ்கானா என்ற களஞ்சியத்தில் ஒப்படைக்காமல் தாமே வைத்துக்கொண்டதாக சிலவற்றை விற்பனை செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

முன்னதாக அந்நாட்டின் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் விசாரணை நடத்த முகாந்திரம் இருப்பதாகக் கூறிய நிலையில் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

Related posts

மாரடைப்பு காரணமாக விவேக் வைத்தியசாலையில்

wpengine

கலந்துரையாடலின் போது முட்டை வீச்சு: மடவளை தேசிய பாடசாலையில் பதற்றம்

wpengine

பியுமியின் புதிய செல்பியினால் சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பு

wpengine