உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாகிஸ்தான் மீதான டம்பின் புதிய பாசம்! கட்டிபிடி வைத்தியம் செய்யுங்கள்

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளால் கடந்த 2012-ம் ஆண்டு கடத்தப்பட்ட அமெரிக்க-கனடா தம்பதியரை பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் மீட்ட நடவடிக்கை அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

குறிப்பாக, ஹக்கானி குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாகிஸ்தானை கடுமையாக கண்டித்து இருந்த டிரம்ப், இது ஒரு ‘நேர்மறையான நடவடிக்கை’ என்று மனம் திறந்து பாராட்டினார்.

அமெரிக்காவுடன் பல்வேறு வகைகளில் பாகிஸ்தான் அளித்துவரும் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்ட  டிரம்ப், பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டு தலைவர்களுடனான உண்மையான உறவு தற்போதுதான் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மீதான டிரம்ப்பின் புதிய பாசத்தை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டொனால்ட் டிரம்ப்புக்கு இன்னொரு கட்டிப்புடி வைத்தியம் செய்யுங்கள் என பிரதமர் மோடியை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படங்கள் அப்போது வெளியாகின. இதை மனதில் வைத்து பாகிஸ்தான் தொடர்பாக டிரம்ப்பின் மனப்போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை கிண்டலடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Dematagoda Kahiriya Girl School 4 floors building opend ZAM REFAI Haj

wpengine

வௌ்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine

போலி அனுமதிப்பத்திரம்! உதய கம்மன்பில கைது

wpengine