பிரதான செய்திகள்

பாகிஸ்தான் உங்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்யும் ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பாகிஸ்தான் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பின்நிற்கப்போவதில்லை என  ஜனாதிபதிமம்னூன் ஹுசைன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸஅவர்கள் கடந்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் சென்ற போது அங்கு பாகிஸ்தான் ஜனாதிபதிமம்னூன் ஹுசைன் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் நாட்டுக்குஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் பயணத்தை ரத்து செய்யுமாறு இலங்கை அரச உயர்மட்டம்கோரிக்கை முன்வைத்துள்ளதாக பாக்கிஸ்தான் அரச தரப்பு மஹிந்த ராஜபக்‌ஷஅவர்களிடம் எத்திவைத்துள்ளாத தகவல் வெளியாகியுள்ளது.

இனவாத குழுக்களை ஏவி விட்டு முன்னாள்ஜனாதிபதியை சில மேற்குலக  சக்திகள்தோற்கடித்து விட்டதாக பாகிஸ்தான்ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசு காவி தீவிரதாத  மோடி அரசுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள நிலையிலும் கடந்த ஆட்சி மாற்றத்தில் இந்தியா நல்லாட்சிக்கு நிதி மற்றும் இதர உதவிகளை  அளித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையிலும் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்‌ஷவுக்கு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது . 

Related posts

அநுர குமார முதல் இடத்திலும்,சஜித் இரண்டாம் இடத்தில் இருக்கின்றார்.

wpengine

65 ரூபாவுக்கு 17 இலட்சம் தேங்காய்! சதொச ஊடாக விற்பனை

wpengine

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் 13-வது முதல்வராக மெகபூபா

wpengine