உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பஹ்ரெனில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடுமை

பஹ்ரெய்னில் பணிப்பெண்ணான பணிபுரிந்த 36 வயதான இலங்கை பெண் ஒருவர் தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பலாத்காரமாக விபச்சாரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முறையிட்டுள்ளார்.

இரண்டு வருடங்களாக தாம் இந்தத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு நாள் ஒன்றுக்கு ரொட்டி மாத்திரமே ஆகாரமாக தரப்பட்டதுடன், ஒவ்வொரு நாளும் 20 ஆண்களுடன் உடலுறவுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் குறித்த பெண் முறையிட்டுள்ளார்.

குறித்த பெண்ணை விபச்சாரத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் பங்களாதேஷ் நாட்டு பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவருடன் இணைந்து செயற்பட்டதாக கூறப்படும் 43 வயதான இலங்கைப்பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். அவரை கைதுசெய்யுமாறு பஹ்ரெய்ன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

(Update) கடற்படை அதிகாரிக்கும் முதலமைச்சருக்கும் இடையில் வாக்குவாதம்:ஹாபீஸ் நஷீர் பதில்

wpengine

பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர்கள் சிலர் அதிருப்தி

wpengine

ஹஸன் அலிக்கு தேசியப்பட்டியல் கிடைத்திருந்தால் கரையோர மாவட்டம் கரையொதுங்கியிருக்குமா?

wpengine