பிரதான செய்திகள்

பஷீர் சேகு­தாவூத் இடை­நி­றுத்­தம்! புதிய தவி­சா­ள­ராக மன்சூர் ஏ. காதர் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 27 பேராளர் மாநாட்டில் கட்­சியின் புதிய தவி­சா­ள­ராக மன்சூர் ஏ. காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்­சியில் தவி­சா­ள­ராக நீண்­ட­காலம் பத­வி­வ­கித்த முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு­தாவூத் குறித்த பத­வி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்­பி­லுள்ள பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்பெறும் இந்த மாநாட்டில், கட்சியின் புதிய உறுப்பினர் சபை மற்றும் உயர்பீட உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும், பேராளர் மாநாட்டில் கட்­சியின் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு ஆத­ர­வா­ளர்­களின் ஒப்­புதல் பெறப்­ப­ட­வுள்­ளது. கட்­சியின் யாப்பில் திருத்தம் கொண்­டு­வ­ரு­வ­தாயின் பேராளர் மாநாட்டின்போதே அதனை மேற்கொள்ள முடியும். ஆகவே, கட்சியின் உத்தியோகபூர்வ செயலாளர் விடயத்தில் யாப்பு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் நகர பிரதேச செயலாளரின் பொது மக்களுக்கான அறிவித்தல்

wpengine

மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கருப்புக்கொடி

wpengine

பேஸ்புக்கில் ஆள் பிடித்த புர்கான்! ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட

wpengine