(ஏ .எச்.எம். பூமுதீன்)
ஹக்கீமின் தனிப்பட்ட விடயங்களை பஷீர் பகிரங்கப்படுத்தி இருப்பது, பஷீரின் அசலை வெளிக்காட்டி இருக்கிறது.
ஒருவரின் அசல், அவர் எந்த உயர்ச்சிக்கு போனாலும் மாறாது என்பதட்கு பஷீர் இப்போது சிறந்த உதாரணமாகியுள்ளார் .
ஹக்கீமை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாமே தவிர அவரை தனிப்பட்ட ரீதியாக விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை.இதேதான் அனைவருக்கும்.
பஷீரின் குற்றச்சாட்டு சரி என்றால் அதட்கு துணை நின்ற பஷீர் மிகவும் கேவலமான செயலையே செய்துள்ளார் என்பதே அதன் அர்த்தம். ஆக, மக்களின் தண்டனைக்குரியவர் பஷீர்த்தான்.
ஏறாவூர் என்ற மரியாதைக்குரிய ஊருக்கு அவ்வப்போது சிலர் தோன்றி அந்த ஊரை அசிங்கப்படுத்தும் நடவடிக்கையில் இறங்குவது வழக்கமாகி வருகின்றது. இந்த விடயத்தில் ஏறாவூர் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அந்த பட்டியலில் இப்போது பஷீரும் இணைய்ந்துள்ளார்..
ஏறாவூரில் அண்மையில் இடம்பெற்ற இரு பெண்கள் படு கொலை செய்யப்பட்ட விடயத்தில் கைதாகி உள்ள சந்தேக நபரர்களில் ஒருவர் இந்த பஷீரின் நெருங்கிய உறவு முறையானவர் .அதனால்தான் , ஒருவரின் அசல் ஒருபோதும் மாறாது என்று குறிப்பிட்டு இருந்தோம்.
எதிரிக் கட்சிக்கும் துரோகி இருக்கக் கூடாது என்ற அடிப்படையில்தான் இந்த ஆக்கம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
4 வருடங்களுக்கு முன்பு தன்னிச்சயாக பஷீர் அமைச்சு பதவி எடுத்த போதே ஹக்கீம் உஷாரடைத்திருக்க வேண்டும்.. அப்போதே அவரது தவிசாளர் பதவியை பறித்து எடுத்திருக்க வேண்டும்..
இரெண்டு முறை தேசியல் பட்டியலையும் இன்னோரன்ன சலுகைகளையும் ஹக்கீம் மூலம் அனுபவித்து விட்டு துரோகம் இழைத்த பஷீர் விடயத்தில் ஒவ்வொருவரும் அவதானமாகவே இருக்க வேண்டும்.
மு கா இல் இருந்து தூக்கி எறியப்படும் பஷீர் வேறு கட்சி அல்லது நபர்களை நாடலாம்.. அப்பிடிப்பட்டோருக்கும் இந்த பஷீர் இதே துரோகதையே செய்வார் என்பதட்க்கு மாற்று கருத்து இல்லை.
எனினும், பஷீரின் பேச்சு , மறுபக்கம் ஹக்கீமின் செல்வாக்கில் அல்லது அவருக்கு போராளிகள் மத்தியில் இருந்த நட்பெயரில் சரிவு அல்லது களங்கம் ஏட்பட்டு இருப்பதை மறுபக்கம் மறுப்பததிற்கும் இல்லை.. இதற்கு தெளிவான விளக்கம் ஹக்கீம் கூறாத வரை இந்த விடயத்தில் மட்டும் பஷீர் ஹீரோதான் என்பதையும் இங்கு கூறித்தான் ஆக வேண்டும்.
இது இவ்வாறு இருக்க, சம்பந்தமே இல்லாமல் அ. இ.ம.கா. தலைவர் ரிஷாத்தை வசைபாட மு.கா. முகநூல் குஞ்சுகள் முயற்சிப்பது , பஷீரின் கருத்தை மேலும் வலுவூட்ட செய்யும் என்பதையும் அவர்கல் புரிந்து கொள்ள வேண்டும்.
அமைச்சர் ரிஷாத் , அமைச்சு ரீதியாக சந்திக்கும் பெண் அதிகாரிகள், வெளிநாட்டு பெண் தூதுவர்,பெண்அமைச்சரகளின் புகைப்படங்களை எடுத்து சேறு பூசும் நடவடிக்கையில் போராளி குஞ்சுகள் களம் இறங்கி, அவரையும், அ. இ.ம.கா. தொண்டர்களையும் வம்புக்கு இழுப்பதை உடன் நிறுத்துமாறு ஹக்கீம் பணிக்க வேண்டும்..
பஷீருடன் இணைந்து இவர்களும் வசைபாட துணிந்தால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதையும் ஹக்கீம் தரப்பு புரிந்து கொள்வது அவசியம்.