பிரதான செய்திகள்

பழிவாங்கல்களை தடுக்க நீதிமன்றம் செல்லும் ஐ.தே.க

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவற்றை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தை நாடத் தீர்மானித்துள்ளனர்.


இதற்கான சட்ட நடவடிக்கை மற்றும் ஆலோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் குழு மேற்கொள்ள உள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையுடன் நிறுத்தாது தொடர்ந்தும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்தால், சர்வதேச வரை சென்று முறைப்பாடுகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

Related posts

மின்சாரக் கட்டண குறைப்போடு ஒப்பிட்டு, நீர் கட்டணமும் குறைப்பு . !

Maash

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள்! ஆப்பு வைக்கும் வடக்கு முதலமைச்சர்

wpengine

பெரிய குளம் சிறிய குளம் ஆகியவற்றை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கை துரிதம்

wpengine