பிரதான செய்திகள்

பள்ளிவாசல்,பெளத்த குருமார்களையும் தலதா மாளிகையும் தாக்கிய பிள்ளையான் நீலக்கண்ணீர்

பிள்ளையான் போன்றவர்களின் பாராளுமன்ற உரை அவரின் வக்கிரங்கள் இன்னும் மாற வில்லை என எண்ணத் தோன்றுகிறது…!!!

25.03.2021 பிள்ளையான் எனும் சிவனேச துரை சந்திர காந்தன் ஆற்றிய பாராளுமன்ற உரை தொடர்பில் அவருக்கு சில புரிதல்களை கூற வேண்டும், வெளிச் சக்திகள் என்று நம்பபடும் சிலரால் இயக்கப்பட்டு 400 மேற்பட்ட உயிர்களை கொலை செய்த படுபாதகன் சஹ்ரான் செய்த தவறுக்காக மாண்டு போன ஒருவனின் செயற்பாடிகளுக்காக இன்னும் முஸ்லீம்கள் சொல்லொன்னா துயரமும் மன வேதனையும் அடைந்து கொண்டிருக்கும் நிலையில்
பிள்ளையான் போன்றவர்களின் பாராளுமன்ற உரை அவரின் வக்கிரங்கள் இன்னும் மாற வில்லை என எண்ணத் தோன்றுகிறது.

இன்றை பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கின்ற சஜித் பிரமதாசவினுடைய தந்தை முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரமதாசவை
கொலை செய்து
மயந்த திசாநாயக்காவின் தந்தை சிரேஷ்ட அமைச்சர் காமினியை கொலை செய்து அதனோடு இணைந்து 30 வருட காலமாக ஆயிரக்கணக்கான சிங்கள முஸ்லீம் தமிழ் உயிர்களை கொலை செய்து
பெளத்த பிக்குகளை நடுவீதிகளில் வெட்டியும் சுட்டும் கொலை செய்து
தலதா மாளிகைக்குள் குண்டு அடித்து உயிர்களை காவு கொண்டு பள்ளிகளில் தொழுகை நேரங்களில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்ட ரத்த வாடை கொண்ட அமைப்பில் இருந்து அதன் சித்தாந்தங்களில் வளர்தெடுக்கப்பட்ட பிள்ளையான் இன்னும் முஸ்லீம் இளைஞர்களை தவறாக காட்ட முன் வரக் கூடாது.

பிள்ளையான் போன்றவர்கள் இவ் விடயங்கள் தொடர்பில் எங்கும் பேச அருகதையற்றவர்கள்.

எனவே இவ்வாறு முஸ்லீம் சமுகத்தை துயரத்தினுள் தள்ளுகின்ற நிலைபாடுகளை கை விட்டு நாடு தொடர்பில் சிந்திக்குமாறு வேண்டுகிறேன்.

அஸ்மி அப்துல் கபூர்
முன்னாள் பிரதி முதல்வர்
அக்கரைப்பற்று.

Related posts

சட்டவிரோத மணல் கொள்ளை! 125000ரூபா தண்டப்பணம்

wpengine

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலக வேண்டும்.

wpengine

வட மாகாணத்திற்கு புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்.

wpengine