பிரதான செய்திகள்

பள்ளிவாசலுக்கான இலத்திரனியல் உபகரணங்களை அமைச்சர் றிஷாட்

(ஊடகப்பிரிவு)

அம்பாறைக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசலுக்கான இலத்திரனியல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், கட்சியின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீத், முன்னாள் தவிசாளரும்,நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் மற்றும் பள்ளிவாசல் நிருவாகத்தினர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுக்கள் இரத்து?

Editor

32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Maash

டிசம்பருக்கு முன்னர் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்

wpengine