பிரதான செய்திகள்

பல வருடங்களின் பின் மீண்டும் நாட்டை அச்சுறுத்தும் “டெங்கு 3” வைரஸ்!

இலங்கையில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின் படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஒருவருக்கு காய்ச்சல் இரு தினங்களுக்கு மேல் காணப்படுமாயின், டெங்கு பரிசோதனை நடத்துவதன் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

டெங்கு 3 க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியோ, ஆன்டிபாடிகளோ இல்லை என கூறியுள்ள அவர், இந்த வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கடந்த வாரம் மாத்திரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சிகாதார பிரிவுகளும் இந்த அதிக அபாய வலயங்களில் உள்ளடங்குவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன் மேலதிகமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள சில சுகாதார மற்றும் மருத்துவ பிரிவுகளும் டெங்கு அபாய வலயங்களுக்குள் உள்ளடங்கியுள்ளன.

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Related posts

தனி நபர்களினால் உடைக்கப்படும் குளம் – ஆர்ப்பாட்டத்துடன் பிரதேச செயலாளரிடம் மனு கையளித்த மக்கள் .

Maash

வாழைச்சேனையில் பதற்றம்! பின்னனி யோகேஸ்வரனின் நிதி

wpengine

சவுதியில் மரணமான இலங்கைப் பெண் குறித்து விஷேட விசாரணை

wpengine