பிரதான செய்திகள்

பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல்

பொலநறுவை எலஹெர – பக்கமூன பெல்அத்துவாடி பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இரத்தினக்கல் சுரங்கத்திற்குள்ள கருங்கல்லில் இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் நிறை இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகம் என கணிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கருங்கல்லுக்கு நடுவில் சிக்கியிருக்கும் இரத்தினக்கல் சுமார் 1000 கரட்டிற்கும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.


கருகல்லுக்குள் சிக்கிய நிலையில் இரத்தினக்கல் இருப்பது மிகவும் அரிதான விடயம் என சுரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

25வருடகாலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வீடுகளை வழங்கிய அமைச்சர் றிஷாட்

wpengine

உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

wpengine

கொழும்பு மேயர் தெரிவு பொது நிர்வாக அமைச்சு வழிகாட்டுதல்களுக்கு மாறாக இடம்பெற்றதாள், எதிராக சட்ட நடவடிக்கை!

Maash