பிரதான செய்திகள்

பறிக்கப்பட்ட மற்றும் கைமாறிய அமைச்சுக்களின் முழுமையான விபரம்

தேசிய அரசாங்கத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை மறுசீரமைப்பில், சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, வேறு அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், சிலரின் அமைச்சுப் பதவிகள் கைமாற்றப்பட்டுள்ளன.

அது தொடர்பான முழுமையான விபரம் இதோ,

வெளிவிவகார அமைச்சராக பணியாற்றி வந்த மங்கள சமரவீரவிடமிருந்து அந்த பதவி பறிக்கப்பட்டு, நிதி அமைச்சராக செயற்பட்ட ரவி கருணாநாயக்கவிற்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவிடமிருந்து அந்த பதவி பறிக்கப்பட்டு, வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டு வந்த மங்கள சமரவீரவிற்கு நிதி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீரவிற்கு மேலும் ஊடகத்துறை அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.

ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலக காணி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற மறுசீரமைப்பு விடயதானம் அவருக்கே வழங்கப்பட்டுள்ளது.

சமூக அபிவிருத்தி மற்றும் நலன்புரி அமைச்சராக இருந்த எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு அந்த பதவியுடன், கண்டிய மரபுரிமை அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சராக இருந்த டபிள்யு.டி.ஜே.செனவிரத்னவுக்கு அந்தப் பதவியே மீண்டும் வழங்கப்பட்டு, சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சுப் பதவி மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக இருந்த மஹிந்த சமரசிங்க துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சராக இருந்த அர்ஜுன ரணதுங்க, பெற்றோலிய வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பெற்றோலிய வளத்துறை அமைச்சராக இருந்த சந்திம வீரக்கொடி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்து தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த திலக் மாரப்பனவுக்கு அபிவிருத்திப் பணிகள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு, மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுப் பதவி மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மீன் சாப்பிட்டால் நன்மை பயக்கும்

wpengine

சட்ட விரோத மணல் அகழ்வு நடைபெறும் இடத்திற்கு ரவிகரன் விஜயம்

wpengine

வன்னி,யாழ் ஆகிய மாவட்டங்களில் தனித்துப்போட்டி

wpengine