பிரதான செய்திகள்

“பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் எதிர்கால இலட்சியங்கள் ஈடேறட்டும்” ரிஷாட்!

நாளைய தினம் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் எதிர்கால இலட்சியங்கள் ஈடேற பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகளுக்கான வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வாழ்வின் இலட்சியங்கள் ஈடேற, கல்வியிலே கண்ணாக இருந்து, பரீட்சை பெறுபேறுகள் பெறுமதிமிக்கதாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் சகலரதும் எதிர்பார்ப்புக்கள் ஈடேறட்டும்.

பெற்றோரின் தியாகங்களுக்கான பெறுபேறுகளை ஒவ்வொரு மாணவரும் பெறவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. வழிகாட்டியில்லாத பயணமாக அமையாது, ஈடேற்றமுள்ள முயற்சியாக மாணவர்களின் திறமைகள் அமையட்டும்.

இந்தக் கடினமான சூழலில், இடையூறுகள் இல்லாமல் மாணவர்கள் அனைவரும் பரீட்சைக்குத் தோற்றி, சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டும் என இறைவனை பிராத்திக்கின்றேன்” என்று கூறினார்.

Related posts

யாழ்ப்பாணத்தில்ஹிருணிகா மீது மொட்டு கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி

wpengine

பஸ்ஸில் சத்தமான பாடல் ஒலிபரப்பினால் 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு

wpengine

ஆப்கானிஸ்தானியர்களே !! உங்களை உளமாற வாழ்த்துகிறேன்.

wpengine