செய்திகள்பிரதான செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு..!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார்.

தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே ஆண்டகை (Archbishop Brian N. Udaigwe) வரவேற்றார்.

பின்னர், பேராயருடன் சிறிது நேரம் உரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் குறிப்பொன்றைப் பதிந்தார். நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்காக உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் இரங்கலையும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-04-24

Related posts

முஸ்லிம்களை கண்டுகொள்ளாத வடமாகாண சபை! புலிகளினால் விரட்டப்பட்டவர்களுக்கு நிதியினை கொண்டுவந்த றிஷாட்

wpengine

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுடன் செல்பி

wpengine

சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்காக ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

wpengine