சினிமாசெய்திகள்

பராசக்தி சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

பராசக்தி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது. தொடர்ந்து, மதுரையில் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்தினர்.

பின், முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாக சுதா கொங்காரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பராசக்தியின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்காக, சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்காரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், சனிக்கிழமை (08) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சிவகார்த்திக்கேயனுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கான முன்மொழிவு.!

Maash

5,000 மதத் தலங்களில் சூரிய மின் தகடுகள் ..!

Maash

11 இடங்களில் கத்திக்குத்து, பூசா சிறைச்சாலையில் கைதியொருவர் கொலை .

Maash