பிரதான செய்திகள்

பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் ,ஆனையிறவு உப்பளம் ஆகிய இடங்களுக்கு சமூகமளித்த இளங்குமரன் எம்பி.

பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் மற்றும் ஆனையிறவு  உப்பளம் ஆகிய இடங்களுக்கு நேற்று திங்கட்கிழமை (03) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தக்கரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் ஆனையிறவு உப்பு உற்பத்தி குறித்த கட்டிடத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

கைத்தொழில் அமைச்சர் எதிர்வரும் 7ம் திகதி யாழ்ப்பாணம் வருகை தர இருக்கின்றார். 

அதனுடன் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் மற்றும் ஆனையிறவு  உப்பளத்திற்கும் வருகை தரவுள்ளார். 

அவரின் விஜயம் தொடர்பாக முன்னாயத்த விடயங்களை பார்வையிட இன்றைய கள விஜயம் அமைந்தது.

ஆனையிறவு  உப்பளத்தை கடந்த காலங்களில் இவ்வாறான உற்பத்திகளை முடிவுப்பொருள் ஆக முன்பே வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்தது.

நாங்கள் முடிவுப்பொருளாக்கி அதிக இலாபம் ஈட்டுவதுடன், இவற்றின் ஊடாக இப்பிரதேசத்தைச் சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும் என்றார். 

Related posts

யாழ்.வடமராட்சி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தாக்கியதில் தந்தை பலி.!

Maash

பலமிழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!

wpengine

ராவண பலய அமைப்பின் சொந்த தேவைக்கு 7 வாகனம் கொடுத்த விமல் வீரவன்ச

wpengine