பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு விடுக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்..!!!

சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொலைபேசியூடாக, அவருக்கு இந்த அழைப்பை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர் காணி உரிமை, கடற்றொழிலாளர் உரிமை, உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவின் தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்” (Speed Gun) இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Maash

33 வருட நிறைவையொட்டி நாசா வெளியிட்ட புதிய புகைப்படம் வெளியானது!

Editor

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 5653 ஏக்கர் பெரும் போக நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு

wpengine